Archive for December, 2017

December 28, 2017

63 நாயன்மார்களும், அவர்களைப் பற்றிய எளிமை யான வரலாற்று சுருக்கமும்

ஓம் நமசிவாய

https://www.youtube.com/watch?v=G1V44Yvs_qs

63 நாயன்மார்களும், அவர்களைப் பற்றிய எளிமையான வரலாற்று சுருக்கமும்

1. திருநீலகண்ட நாயனார் / Tiru Neelakanta Nayanar கூடா நட்பின் விளைவால்,மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது,முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவபெருமான் அருளால் இளமை பெற்றார்.

2.இயற்பகை நாயனார் / Iyarpahai Nayanar சிவனடியாராக வந்த சிவனிடம்,தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார் / Ilayankudi Mara Nayanar நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக,நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார் / Meiporul Nayanar தன்னுடைய பகைவன்,போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும்,சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து,பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர் / Viralminda Nayanar சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால்,சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.

6.அமர்நீதியார் / Amaraneedi Nayanar சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக,ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்

7.எறிபத்தர் / Eripatha Nayanar சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின்,தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8.ஏனாதிநாதர் / Enadinatha Nayanar கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல்,தன் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர் / Kannappa Nayanar பக்தியில்,சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர்.அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நைவைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர் / Kungiliya Kalaya Nayanar சாய்ந்த லிங்கத்தை,தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும்,மனைவி கொடுத்த தாலியை விற்று,உணவு வாங்காமல்,சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார் / Manakanchara Nayanar மறுநாள்,தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும்,சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர் / Arivattaya Nayanar சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால்,மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர் / Anaya Nayanar புல்லாங்குழல் ஓசையில்,சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி / Murthi Nayanar சந்தனக் கட்டைகள் கிடைக்காது,தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம்,சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்

15.முருகர் / MurugaNayanar வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம் , பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி / Rudra Pasupathi Nayanar கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார் ( நந்தனார்) / Tiru Nalai Povar Nayanar தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanar சிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்ததந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar தேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandar
ஞானக் குழந்தை. பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula Nayanar திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar கண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanar சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்

32.சோமாசிமாறர்/Somasira Nayanar நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya Nayanar அன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanar சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

37.கணநாதர்/Gananatha Nayanar சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanar நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanar வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanar வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanar சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar மன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanar விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்.

47.காரி/Kari Nayanar காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanar இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar அரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanar அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanar சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanar சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanar பொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்/Nesa Nayanar எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானி/Isaijnaniyar சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர்….

சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோயில்.

December 19, 2017

Amritha Varshini – 45th Issue

Namaskaram

We are glad to release the 45th issue of Amritha Varshini today on the auspicious occasion of Anusham coupled with first day of Margazhi.

https://drive.google.com/open?id=1u87UYUZkWLNslTgb5Qy3IHkJpxcG8rqJ

Kindly read and share your valuable feedback.

Kindly pass on the Magazine to all.

Wishing all our readers a very happy and prosperous new year.

Humble Pranams

Anand Vasudevan
Editor – Amritha Varshini
Anusham / Margazhi 1st Day / 16th Dec 2017
Dharumamigu Chennai

 

image3

December 3, 2017

Voice of JagadGuru – Nov 2017 Edition

Sri Gurubhyoh Namaha!

With the blessings of our Jagadguru Mahasannidanam Sri Sri Sri Bharathi Teertha Mahaswamigal and Sannidanam Sri Sri Sri Vidhushekara Bharathi Mahaswamigal, we are publishing the Nov’ 2017 edition of the e-magazine, VoiceOfJagadGuru. Please use the below links to access the magazine

For E-Magazine – Nov’17 E Magazine​​

For Slokas – Nov’17 Slokas​​​​

With Pranams,

Team – VoiceOfJagadGuru