தோடகாஷ்டகம் – Thotakashtakam with Meaning.

தோடகாஷ்டகம்Thotakashtakam With Tamil Meaning.

ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்யர் சிருங்ககிரி மடாலயத்தில் எழுந்தருளி, யாவருக்கும் அனுகிரகஞ் செய்து கொண்டிருக்கும்போது, குரு பணிவிடைகளில் மிகப் பக்தியுடையவரான “ஆனந்தகிரி” என்னும் மாணாக்கர், இச்சங்கர பகவத்பாதாச்சாரியர் சந்நிதியை அடைந்து, உடம்பை நிழல்பற்றிச் செல்வதுபோல ஆசாரிய சுவாமிகளின் கருத்தை யுணர்ந்து ஏவாமலே சிறந்த தொண்டுகளை செய்து வந்தனர்.

ஒருநாள் மாணாக்கரெல்லாரையும் வைத்துக்கொண்டு வேதாந்த பாடம் ஆரம்பிக்கும் சமயத்தில், ஆனந்தகிரி என்னும் மாணாக்கர், ஆசிரியரின் காஷாய வஸ்திரத்தைச் சுத்தம்செய்து வர ஆற்றுக்குப் போயிருந்தார். அப்போது, மற்ற மாணாக்கர்கள், பாடத்தை ஆரம்பிக்கும்படி பிரார்த்தித்து நிற்கையில், “ஆனந்தகிரி” வரட்டும், என்று ஆசாரியரது கட்டளை யுண்டாயிற்று.

அப்போது, பத்மபாதர் வணங்கி, சுவாமி! அவர் செய்யுந் திருப்பணி, செய்துகொண்டே இருக்கின்றனர்; அவர் வராமை எங்கள் பாடத்திற்குத் தடையாகலாமா? என்று வினாவினர்.

அதற்கு ஆசாரிய சுவாமிகள், பத்மபாதருக்கு அச்செருக்குத் தொலையும்பொருட்டுத், தமது அன்பராகிய ஆனந்தகிரிக்கு, வேத சாஸ்திரங்களாகிய பதினான்கு வித்தையும் வரும்படி மனதினாற் கருணையோடு கிருபை செய்தனர். உடனே ஆனந்தகிரிக்கு எல்லா வேத சாஸ்திரங்களும் வந்துவிட்டன. பின்னர், ஆனந்தகிரி ஆசாரிய சுவாமிகளிடம்வந்து வணங்கி நின்று தோடக சந்தத்தால் குருஸ்துதி செய்தனர்.

இதுவே தோடகாஷ்டகம் என்றாயிற்று.

Totakacharya

One of the chief disciples of Sri Adi Shankara composed an octad of verses in praise of the Master. The metre he has used in this composition is the difficult but beautiful totaka. Hence he was himself given the name Totakáchárya. Every word of this exquisite hymn bespeaks the utter devotion of its author to Sañkara. Sañkara, the Guru, is all to him. There is nothing equal to the Guru; nothing superior to him. The Guru is the dispeller of the darkness of ignorance. There can be no greater good than the removal of ignorance. The spirit of devotion of the disciple is best expressed in the soul-moving burden of this song :
Be Thou my refuge, O Master, Shañkara (bhava Sañkara deshika me sharanam)!

1. विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत्कथितार्थनिधे |

हृदयेकलयेविमलंचरणं भवशंकरदेशिकमेशरणम् ||१||

விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே, மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 1.

viditákhilashastrasudhájaladhe mahitopanisatkathitárthanidhe

hrudaye kalaye vimalam charanam bhava Shañkara deshika me sharanam.(1)

அறியப்பட்ட எல்லா சாஸ்திரங்களுக்கும் திருப்பாற்கடல் போன்றவரே! மேன்மைபொருந்திய உபநிஷத்துக்களாற் பிரதிபாதிக்கப்பட்ட அர்த்தங்களுக்கு இருப்பிடமானவரே! தேவரீருடைய பரிசுத்தமான திருவடிகளை இருதயத்தில் தியானிக்கின்றேன். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

O Thou, the knower of all the milk-Ocean of Scriptures! The expounder of the topics of the great Upanisadic treasure-trove! On Thy faultless feet I meditate in my heart, Be Thou my refuge O Master, Sankara!

2. करुणावरुणालयपालयमां भवसागरदुःखविदूनहृदम् |

रचयाखिलदर्शनतत्त्वविदं भवशंकरदेशिकमेशरणम् ||२|

கருணா வருணா லயபா லயமாம், பவஸாகர து: க்க விதூந ஹ்ருதம் |

ரசயாகில தர்ஶந தத்வ விதம், பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 2.

karunávarunalaya pálaya mám bhavaságaradukhavidünahrudam

rachayákhiladarshanattattvavidam bhava Shañkara deshika me Sharaïam.(2)

O the Ocean of compassion! Save me whose heart is tormented by the misery of the sea of birth! Make me understand the truths of all the schools of philosophy!

Be Thou my refuge, O Master, Sañkara.

அருள்நிறைந்த ஆலயமே! ஜனன மரண சமுத்திரத்தில் துக்கத்தால் அலைகின்ற சித்தத்தையுடைய என்னைக் காப்பாற்றியருள்வீராக. சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்பவனாக என்னைச் செய்தருவீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

3. भवताजनतासुहिताभविता निजबोधविचारणचारुमते |

कलयेश्वरजीवविवेकविदं भवशंकरदेशिकमेशरणम् ||३||

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா, நிஜபோத விசாரணசாருமதே |

கலயேஶ்வர ஜீவ விவேக விதம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 3.

bhavatá janatá suhitá bhavitá nijabodhavichárana chárumate

kalayeshvarajivavivekavidam bhava Shañkara deshika me sharanam.(3)

தங்களால் ஜனத் திரளானது சுகமுள்ளதாய்ச் செய்யப்பட்டது.

ஆத்மஞானத்தை விசாரிப்பதில் அழகான மதியுடையவரே!

ஜீவேசுவரர்களை விசாரித்தறியும் ஞானமுடையவனாக என்னைச் செய்தருள்வீராக.
சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
By thee the masses have been made happy, O Thou who hast a noble intellect, skilled in the inquiry into self-knowledge! Enable me to understand the wisdom relating to God and the soul. Be Thou my refuge, O master, Sañkara.

4. भवएवभवानितिमेनितरां समजायतचेतसिकौतुकिता |

ममवारयमोहमहाजलधिं भवशंकरदेशिकमेशरणं ||४||

பவஏவபவா நிதிமே நிதராம், ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |

மமவாரய மோஹ மஹாஜலதிம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம்

bhava eva bhavániti me nitarám samajáyata chetasi kautukitá

mama váraya mohamahájaladhim bhava shankara deshika me sharanam.(4)

Knowing that Thou art verily the Supreme Lord, there arises overwhelming bliss in my heart. Protect me from the vast ocean of delusion.Be Thou my refuge, O Master, Sankara.

தேவரீரே பரமேசுவரரென்று என்மனதில் ஆனந்தமுண்டாகின்றது. என்னுடைய மோகமாகிய பெருங்கடலை நீக்கியருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

सुकृते | अधिकृतेबहुधाभवतो भवितासमदर्शनलालसता |

अतिदीनमिमंपरिपालयमां भवशंकरदेशिकमेशरणम् ||५||

ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ ,பவிதா ஸமதர்சந லாலஸதா |

அதிதீநமிமம் பரிபாலய மாம் , பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 5.

sukrute dhikrute bahudhá bhavato bhavitá samadarsanalalasata
atidinamimam paripálaya mám bhava Shañkara deshika me sharanam.(5)

ஓ புண்ணியமூர்த்தியே! உலகங்ளை ஆள்பவரே ! தேவரீரிடமிருந்து சமதிருஷ்டியாகிய சந்தோஷமானது பல பிரகாரமாக அனைவருக்கும் உண்டாயிற்று. மிகத் துக்கியாகிய இந்த என்னைக் காப்பாற்றி யருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

Desire for the insight into unity through Thee will spring only when virtuous deeds are performed in abundance and in various directions. Protect this extremely helpless person. Be Thou my refuge, O Master, Sañkara.

6. जगतीमवितुंकलिताकृतयो विचरन्तिमहामहसश्छलतः |

अहिमांशुरिवात्रविभासिगुरो भवशंकरदेशिकमेशरणम् ||६||

ஜகதீ மவிதும் கலிதா க்ருதயோ விசரந்தி மஹா மஹஸஶ்ச்சலத: |
அஹிமாம் ஶுரிவாத்ர விபாஸி குரோ பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 6.

ஓ குருமூர்த்தியே! உலகங்களை இரட்சித்தருளத் தேவரீருடைய மஹாமஹிமை வாய்ந்த திருவிளையாடல்கள் உன்னதமாய் விளங்குகின்றன. தேவரீரும் இங்கு சூரியனுக்குச் சமானமாக விளங்குகின்றீர். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

jagatimavitum kalitákrutayo vicharanti mahamahasashchalatah
abhimámsurivatra vibhási guro bhava Shañkara deshika me sharanam.(6)

O Teacher! For saving the world the great assume various forms and wander in disguise. Of them, Thou shinest like the Sun.
Be Thou my refuge, O Master, Sañkara.

7. गुरुपुंगवपुंगवकेतनते समतामयतांनहिको | अपिसुधीः |

शरणागतवत्सलतत्त्वनिधे भवशंकरदेशिकमेशरणम् ||७||

குருபுங்கவ புங்கவ கேதந தே ஸமதா மயதாம் நஹி கோபி-ஸுதீ: |

ஶரணாகத வஸ்தல தத்வநிதே பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 7.

gurupuñgava puñgava ketana te samatámayatám nahi ko pi sudhi:
Sharanágatavatsala tattvanidhe bhava Shañkara deshika me sharanam.(7)

தங்களிடம் அடைக்கலம் புகுந்தவரிடத்தில் அன்புடையவரே! உண்மைப்பொருளுக்கு இடமானவரே! ஓ குரவர் சிகாமணியே! மேலோருக்கும் மேலாயிருப்பவரே! தேவரீருக்குச் சமானமாம் தன்மையை, விரிவாகத்தெளிந்த எந்த அறிஞனும் அடைந்ததில்லை. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

O the best of Teachers! The Supreme Lord having the bull as banner! None of the wise is equal to Thee! Thou who art compassionate to those who have taken refuge! The Treasure-trove of truth!
Be Thou my refuge, O Master Sankara.

8. विदितानमयाविशदैककला नचकिंचनकाञ्चनमस्तिगुरो |

द्रुतमेवविधेहिकृपांसहजां भवशंकरदेशिकमेशरणम् ||८||

விதிதா நமயா விஶதைககலா ந ச கிஞ்சந காஞ்சந மஸ்தி குரோ |

த்ருதமேவ விதேஹிக்ருபாம் ஸஹஜாம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 8.

viditá na mayá vishadaikakalá na cha kimchana kánchanamasti guro
drutameva vidhehi krupám sahajám bhava Shañkara deshika me sharanam.(8)

Not even a single branch of knowledge has been understood by me correctly. Not even the least wealth do I possess, O Teacher. Bestow on me quickly Thy natural grace. Be thou my refuge, O Master Sañkara.

ஓ குருமூர்த்தியே! ஒரு சாஸ்திரமேனும் தெளிவுடையதாய் என்னால் அறியப்படவுமில்லை; சிறிது பொன்னுமில்லை; தங்களுடன் பிறந்த கருணையைச் சீக்கிரம் தந்தருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

தோடகாஷ்டகம் தமிழ் உரை முற்றும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: