Archive for ‘மஹான்கள் சரித்திரம்’

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 8*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 8*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

திரு கணபதி சாஸ்திரிகள் 41 ஆண்டுகள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்திருந்தாலும் அந்த மிகக் குறைந்த வாழ்நாளில் பல மாணவர்களுக்கு கற்பித்தும், பல்வேறு நூல்களையும் எழுதியும் இருக்கிறார்கள்.

அவர்கள் எழுதிய நூல்களில் சிலவற்றைக் கீழே தருகிறோம்: அவற்றுள் சிலவே அச்சாகின. பல கிடைக்கவே இல்லை.

வைதிக – கர்மகாண்ட கிரந்தங்கள்:

1) முகரம் (வைதீகாபரண வ்யாக்யானம் (யஜுர் வேதம் ), 2)காலஸ்வர கௌமுதீ (ஸாம வேத தொடர்புள்ளது), 3) அநியாபதேச பஞ்சாசத், 4) காயத்ரீ பாஷ்யம், 5) யக்ஞவைபவப்ரகாச:, 6)முகுரமுகமுத்ரணம், 6) ஆபஸ்தம்ப பித்ரு மேத ஸூத்ர வ்ருத்தி 7) சபிண்டீகரண விதி, 8) *சபிண்டீகரண क्षौर நிர்ணய: :(published) * 9) தீபாவளீ நிர்ணய: , 10)வயோநிர்ணயம், 11) விபூதி தாரணம்:,

*வேதாந்த கிரந்தங்கள்:*

12) ஈசோபநிஷத் விபூதி:, 13) ஈசாவாஸ்ய வ்ருத்தி, 14) கேனோபநிஷத் விபூதி:, 15)நைர்குண்ய ஸித்தி, 16) அதசப்தார்த்தவிசார: , 17) சாரீரக மீமாம்ச ரஹஸ்யம், 18) நி:ஸ்ரேயஸ நிஸ்ரேணி:, 19)ஆச்சார்யோக்த்தி விபூஷணம், 20)மாயாநிவிருத்தி சதகம், 21) யோகீஸ்வர தர்சன மஹிமா, 22) ஆசா தூஷணம், 23)கர்மணாம் சித்த சுத்திபிரகார: 24)த்ரவ்யகுணப்ரகாச: , 25) ஸ்ரவண விதி வாக்யார்த்த: , 26) பார்த்தப் ப்ரஹரணம் (வ்யாக்யானம்)

*காவ்ய – நாடக கிரந்தங்கள்:*

27) துருவ சரிதம், 28) தடாதகா பரிணய, 29)சாரசிகாசந்தான: (நாடகம் ), 30)பிரஹசனம் (நாடகம் ), 31)ஜீவவிஜய (சம்பூ), 32) ரசிக பூஷணம் :(published), 33)அந்யாபதேச பஞ்சாசத் :(published), 34)லக்ஷ்மீவிலாச: (நாடகம் ), 35)வ்ருத்த மணி மாலா :(published), 36)பர்யாயோக்தி சதவ்யாக்யா:, 37)சாம்ராஜ்ய லக்ஷ்மீ பரிணய: (நாடகம்)

*ஸ்தோத்திர கிரந்தங்கள்:*

38)கடாக்ஷ சதகம் 39)ஸாரஸ்வத சஹஸ்ரம், 40)துரக சதகம், 41)பரமேஸ்வராஷ்டகம், 42)மஹாமாயாஷ்டகம் :(published), 43)சூர்யத்வாதசம், 44) ஸம்ஸ்க்ருதாஷ்டகம், 45) ஸுப்ரஹ்மண்யாஷ்டகம், 46)சனைஸ்சராஷ்டகம், 47)க்ருஷ்ண த்வாதசகம், 48) குருவாயுபுரேஸாக்ஷர மாலாஸ்தவ: :(published), 49) ஸ்ரீ வாதபுர நாதாஷ்டகம், 50) குருவாயுபுர நாத பஞ்சரத்னம், 51)தேசிக தண்டகம், 52)ஸ்ரீ சங்கராச்சார்யாஷ்டோத்தரம், 53) குருராஜ ஸப்ததி:, 54)ஆர்த்திஹராஷ்டகம், 55)தேவீ த்வாதச மஞ்சரீ, 56)கும்பேசாஷ்டகம், 57)தேவ்யஷ்ட ப்ராஸ:,58) மூகப் ரஸாதா தர்சன:, 59)அனந்த பத்மநாப ஸ்துதி:, 60)ஆசீர்வாத மஞ்சரி.

*தொகுக்கப்பட்ட கிரந்தங்கள்:*

61) ந்யாய ரக்ஷா மணி(appaya dikshitar) :(published) 62) ஸ்ரீருத்ர பாஷ்யம், 63)காச்யப க்ஷேத்ர மஹாத்ம்யம், 64) மஹாபாரதம் – சாந்தி பர்வம் (தமிழ்) :(published) – 240 அத்தியாயங்கள் மொழிபெயர்த்தார். அதன் பிறகு நோய்வாய்ப்பட்டு, ஆபத் சன்யாசம் ஏற்றுக்கொண்டு முக்தி யடைந்தார்) மீதம் உள்ள அத்தியாயங்களை கருங்குளம் மஹாமோபாத்யாய கிருஷ்ணா சாஸ்திரிகள் மொழிபெயர்த்தார்.

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் சரிதம் முற்றும்*

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 7*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 7*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

*சூரியன் மறைகிறது*

பேரறிவாளன் அல்ப ஆயுளிலோ சந்ததி இல்லாமலோ ஏழ்மையானவனாகவோ இருப்பான் என்ற ஆன்றோர் வாக்கு திரு சாஸ்திரிகளைப் பொருத்த வரையில் உண்மையானதாக இருந்தது. திரு சாஸ்திரிகள் அல்ப ஆயுளில் மகப்பேறும் இல்லாத துயரத்தை அடைந்தார்.

இங்ஙனம் இருந்த பொழுதிலும் அவர் பரம்பொருள் நினைவில் ஈடுபட்டு சங்கர பகவத் பாதர், சதாசிவப் பிரம்மேந்திர சரஸ்வதி முதலிய பெரியவர்களால் அருளப்பட்ட கிரந்தங்களை படித்துக்கொண்டு ஞானம் நிலைத்தவராக காலம் கழித்தார்கள்.

1912-ம் ஆண்டு தமது கடைசிக் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தார். அது முதல் விதிப்படி ஆபத் சன்யாசத்தைக் கைக்கொண்டார்கள். உடனே பூத உடல் விட்டு புகழ் உடம்பு அடைந்தார்கள்.

இவருடைய புலமையைப் பாராட்டி, புகழுடம்பு எய்திய பிறகு (posthumas ) இங்கிலாந்து அரசு மஹாமஹோபாத்யாய என்ற அரும்பெரும் விருது வழங்கி கவுரவித்தது. இப்பட்டம் கிடைக்கப்போவதாக, அவர் உயிருடனிருக்கும் போதும், அவருக்கும் பிறருக்கும் தெரியாதாம். கணபதி சாஸ்திரிகள் ஒரு மாபெரும் மேதை. மிக்க கூர்மையான புத்தி படைத்தவர். எட்டு வயதில் உபநயனம் ஆன உடன், அவர் பாட்டனார் மூலம் ஸ்ரீவித்யா மந்த்ரம் எடுத்துக்கொண்டு 16 வயதில், அந்த மந்த்ர சித்தி அடைந்தவர். அதே வயதில் அவர் ‘கடாக்ஷ சதகம்’ இயற்றினார். சிவபக்திச் செல்வர். ஆழ்ந்த தேவி உபாசகர். அன்றாடம் அந்தணனுக்குரிய கடமைகளை செய்யத் தவறாதவர். கற்றவர், கல்லாதவர், ஏழை, செல்வந்தர் ஆகிய எவருடைய மதிப்புக்கும் உரியவர். ஒப்பற்ற கவித்திறனும் நாவன்மையும் படைத்தவர். சிறந்த எழுத்தாளர். 41 ஆண்டுகளே இம்மண்ணுலகில் வாழ்ந்தாரெனினும், சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் அதிகமான நூல்களை படைத்தாரென்றால் அவரது அறிவு, ஆற்றல் உழைப்பிற்கு சான்று என்ன வேண்டும்?

இந்த மஹானை சற்று நேரம் நம் நினைவில் நிறுத்தி, அவரை நமஸ்கரிப்போம்.

அடுத்த பதிவில் அவர் எழுதிய நூல்களைப் பார்ப்போம். *TO BE CONTINUED*

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 6*

OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
MOST RESPECTFUL PRANAMS TO ACHARYA’S ACHARYA SRI GANAPATHY SHASTRIGAL

An episode during study (excerpt from “A succinct Biography” – by Sri A. Kuppuswamy)

One of those who taught the Acharya during this period was Sri Ganapathi Shastrigal of Painganadu near Mannargudi. He was a versatile scholar. Before he was forty years of age, he had written about a hundred works, in Sanskrit – short and long. He was awarded the title of ‘Mahamahopadhyaya’, by the Government of India posthumously just ten days after his demise. Ganapathi Shastrigal was residing in a house opposite to the Sankara Mutt, Kumbakonam. He would go to the Math early in the forenoon and teach the teen-aged Acharya for about an hour.

In the evenings, lessons in Sastras, Sanskrit, prosody etc. were imparted to the Acharya. In the spring season, the teacher and the student would sit for an hour or more on the sands of the dry bed of the Cauvery, near the mutt and there the lessons used to be carried out.

One evening the tutor was teaching. The Acharya was frequently thrusting the fingers of his left hand in the sand. Ganapathi Shastrigal observed this. The next morning he went to the mutt as usual. After prostrating to the Acharya, he said “Please permit me to leave Kumbakonam and go to my village”. The young Acharya was much surprised and he asked the teacher, “What is the reason for this sudden request of yours?” Shastrigal’s reply was a bit stern. He replied, “A student, desiring to acquire knowledge, should be quite attentive when lessons are going on. Concentration of the mind is essential. My guru used to tell his pupils that one sitting on sand but not touching it and one having a knife on his hand, but not doing anything with it and one having his mind fixed in something worthy, as examples for a “Sthita-Prajna” (one with a steadfast mind). Yesterday evening your Holiness was a bit inattentive to what was being taught yesterday evening.”

The Acharya quickly interposed and said, “I was attending although I was thrusting my hand into the sand off and on. I shall now repeat all of what was taught yesterday evening”. Ganapathi Shastrigal who was struck with wonder at the amazing memory and precociousness of the young Acharya, said, “I feel that I am not necessary hereafter. Your Holiness can learn everything without the aid of a tutor and I can go”. The Acharya was loath to part with such an erudite teacher and Ganapathi Shastrigal continued as teacher for about 10 more months.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

Read more: http://periva.proboards.com/thread/6095/interesting-episode-perivas-early-learning#ixzz5QHm4IYqE

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 6*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

1911-ம் ஆண்டில் கேரளத்தில் உள்ள கள்ளிக்கோட்டை பாலக்காடு முதலிய இடங்களில் செய்யப்பட்ட பிரம்மசூத்திரம், உபநிடதம், பகவத் கீதை ஆகியவற்றைப்பற்றி நடத்திய சொற்பொழிவுகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. கள்ளிக்கோட்டை அரசரான சாமூதிரி ராஜா திரு சாஸ்திரிகளுடைய பெரும் புலமையை அறிந்து பல வெகுமதிகளை அளித்தார்.

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 5*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 5*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

நமது மஹா பெரியவா பால்ய வயதிலேயே பட்டமேற்று, கும்பகோணம் சங்கர மடத்தில் இருந்து பாடங்களை கற்று வந்தபொழுது, அவருக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவர்களில், திரு கணபதி சாஸ்திரிகளும் ஒருவர். அப்பொழுது, திரு கணபதி சாஸ்திரிகள், கும்பகோணம் சங்கர மடத்துக்கு எதிரில் குடியிருந்தார். காலையில், சங்கர மடத்துக்கு சென்று, பாலகனான ஆச்சர்ய ஸ்வாமிகளுக்கு ஒரு மணி நேரம் பாடம் சொல்லுவார். மாலையில், சாஸ்திரம், சமஸ்க்ருதம், காவியம்/அலங்காரம் போன்ற பாடங்கள் நடக்கும். வசந்த காலத்தில், மடத்துக்கு அருகிலேயே ஓடும் காவேரி நதியின் மணல் பரப்புக்கு ஆசிரியரும், மாணவரும் செல்வார்கள். பாடங்கள் நடக்கும்.

இப்படியாக, ஒருநாள் மாலை ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். இளம் வயது மாணவரோ, தன் இடது கை விரல்களால் ஆற்று மணலைத் தோண்டிக்கொண்டு விளையாட்டாக இருந்தார். கணபதி சாஸ்திரிகள் இதைப் பார்த்தார். மறுநாள் நாள் காலை, எப்பொழுதும் போல் அவர், மடத்துக்குச் சென்றார். ஆச்சார்யாளைப் பார்த்து நமஸ்கரித்தார். அப்போது நடந்த சம்பாஷணை:

கணபதி சாஸ்திரிகள்: ஆச்சார்யாள் என்னை சொந்த ஊருக்குப் போக அனுமதிக்க வேண்டும்.!

ஆச்சார்யாள்: (சற்று வியப்பாக) பாடங்கள் நடக்கின்றனவே. இன்னும் முடியவில்லையே. திடீரென்று தங்களின் முடிவுக்கு என்ன காரணம்?

கணபதி சாஸ்திரிகள்: (சற்று கடுமையாக): ஒரு மாணவன், வித்யையில் நாட்டம் கொண்டு நல்லறிவு பெற படித்துவருங்கால், பாடம் நடக்கும் பொது நல்ல கவனம் தேவை. புத்தி சிதறாமல் பாடத்தில் கவனம் வேண்டும். எவன் ஒருவன் ஆற்று மணலில் அமர்ந்துகொண்டு, அதைத் தொடாமல் இருப்பானோ, கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு, அதைவைத்து வேறு ஒன்றும் துருபயோகம் செய்யாமல் இருப்பானோ, மனசை உயர்ந்த வஸ்துவிடம் நிலைத்து வைத்திருப்பானோ – அவனே ‘ஸ்திதப்ரஞ்ஜன்’ என்று எனது குருநாதாள் சிஷ்யர்களுக்கு போதிப்பார்கள். நேற்றைய தினம், பாடம் நடக்கும் போது ஆச்சார்யாள் கவனக்குறைவாக இருந்தார்கள்"

ஆச்சார்யாள்: நான் மணலில் விளையாடியது வாஸ்தவம்தான், ஆனால் பாடத்தில்தான் கவனம் இருந்தது. நேற்று நடந்த பாடத்தைச் சொல்கிறேன்.

– என்று சொல்லி நேற்றைய பாடத்தின் விவரங்களை நுணுக்கமாக சொன்னார்கள்.

இதைக் கேட்ட கணபதி சாஸ்திரிகள் ஆச்சார்யாளின் மதிகூர்மையையும், நினைவாற்றலையும் வியந்து, மறுபடியும் நமஸ்கரித்து நின்று கூறலானார் "இதைக் கேட்ட பிறகு, பாடம் சொல்லிக்கொடுக்க நான் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆச்சார்யாள் ஆசிரியர் இல்லாமலேயே அனைத்தையும் அறிந்துகொள்ளும் அறிவு பெற்றவர். எனக்கு உத்தரவு கொடுக்க வேணும்" என்றார்.

இப்படியாக ஒரு நிகழ்வு.

இதற்குப்பிறகு 10 மாதங்களுக்கு மேல் ஆசார்யாளுக்குப் பாடம் எடுத்தார் கணபதி சாஸ்திரிகள்.

Rendered in Tamil from Source: excerpt from “A succinct Biography” – by Sri Appiah Kuppuswamy

*TO BE CONTINUED*

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 4*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 4*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

இதற்குப் பிறகு திரு கணபதி சாஸ்திரிகள் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார்;

*அத்வைத மஞ்சரி, கச்சபி பட்டம், வேதாந்த கேஸரி பட்டம், காஞ்சி ஆசார்யாளுக்கு ஆசிரியர் *

இப்படி இருக்கும்பொழுது கோனேரிராஜபுரம் என்னும் சிற்றூரில் சாம்பசிவ ஐயர் என்ற மஹான் வசித்து வந்தார். ஸம்ஸ்க்ருதத்தை பரப்புவதில் ஈடுபட்டிருந்த திரு சாம்பசிவ ஐயர், அந்த ஊரில் உள்ள ஸ்ரீவித்யா அச்சகத்தில் பதிப்பாசிரியராக இருந்தார். வேதாந்த சாஸ்திரத்தைப் பரப்புவதற்காக அச்சிட்டு இருந்த அத்வைத மஞ்சரி முதலிய ஏடுகளை ஒப்பு நோக்குவதற்காகவும் வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காவதும் துணை செய்பவர்களைப்பெற திரு ராஜு சாஸ்திரிகளை மன்னார்குடி சென்று திரு சாம்பசிவ ஐயர் வணங்கி நின்றார். திரு ராஜு சாஸ்திரிகள் தமது மாணவரான கணபதி சாஸ்திரிகளை இதற்காக நியமித்தார். விருப்பம்போல் திரு சாஸ்திரிகள் கோனேரிராஜபுரம் சென்று ‘அத்வைத மஞ்சரி’ முதலிய ஏடுகளை அச்சிட ஈடுபட்டதுடன் பல்வேறு சாஸ்திர ஏடுகளைப் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்டு கல்வி அறிவு வழங்கினார். அங்கு மனோரஞ்சககமாகவும், அறிவொளி வளர்ப்பதாகவும் உள்ள பல காப்பிய, நாடக நூல்களை இயற்றினார்.

வடநாட்டிலிருந்து வந்த சிறந்த யோகிகளிடம் இருந்து வைத்ய, யோக சாஸ்திரங்களைப் பயின்றார். பழமானேரி ஸ்வாமிகளிடம் இருந்து வேதாந்தத்தில் மேல்படிப்பு படித்தார்.

1892-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் துலாபார மஹோத்ஸவம் தொடர்பாய் நடந்த அறிஞர் அவையில் பங்கு கொண்டு பேரறிஞர்களால் பெருமை படுத்தப் பட்டார். இவருடைய த்ருதமாக கவி பாடும் திறமையைக் கண்டு கொச்சி அரசர் திரு. ராமவர்மா, *’கச்சபி ‘ * என்ற பட்டத்தை வழங்கினார். 1900-ம் ஆண்டில் ஹூப்ளி நகரத்தில் நடந்த சங்கராச்சாரிய உத்சவ மண்டலியில் ஒன்று சேர்ந்த அறிஞர்களை துவாரகா மட அதிபதிகளான ஸ்ரீ சங்கராச்சாரியார் அத்வைத வேதாந்தம் குறித்து சில நுட்பமான ஏழு கேள்விகள் கேட்டார்கள். அறிஞர்கள் பலரும் அந்த ஏழு கேள்விகளுக்கு பதில் எழுதி மடாதிபதிகளுக்குக் கொடுத்தார்கள். ஆனால், அதில் திரு கணபதி சாஸ்திரிகள் எழுதிய விரிவான மேற்கோள்களுடன் கூடிய அறிவுபூர்வமான பதில் மிகவும் சிறப்பாக இருந்தது என்று ஸ்ரீ துவாரகா மடாதிபதிகள் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் மகிழ்ந்து *’வேதாந்த கேசரி ‘ * என்ற பட்டத்தையும் வழங்கிப் பெருமை செய்தார்கள்.

திரு சாஸ்திரிகள் 1901-ம் ஆண்டு அத்வைத சபையில் அங்கம் வகித்தார். அது முதல் பத்து ஆண்டு காலம் அத்வைத சபையை நடத்துவதில் முக்கிய பங்கு கொண்டார். 1905-ம் ஆண்டு, திரு சாஸ்திரிகள் ஸ்ரீ காமகோடி பீடத்தில் ஆஸ்தான அறிஞராகப் பதவி ஏற்றார்கள். திரு சாஸ்திரிகள் காமகோடி பீடாதிபதிகளான அருள்மிகு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு காப்பியங்களையும், சாஸ்திரங்களையும் கற்பிக்கும் பெரும் பாக்கியத்தை அடைந்தார்கள். இந்த சமயத்தில் அந்த மடத்தில் பகவத் கீதை, ஞான வாசிஷ்டம், ஸூதஸம்ஹிதை ஆகிய ஏடுகளைப்பற்றி பல சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றினார்கள்.

இந்த சமயத்தில், பால சன்யாசியான காஞ்சி ஆசார்யாளுக்கும் ஆசிரியரான கணபதி சாஸ்திரிகளுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடுத்த பதிவில் அனுபவிப்போம்.

*TO BE CONTINUED*

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 3*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 3*
*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

இந்த பதிவில் ஸ்ரீ கணபதி சாஸ்திரிகளின் உத்தம குருவான மன்னார்குடி பெரியவாளைப் பற்றி
ஸ்ரீ மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்வதை படிப்போம்.
*தெய்வத்தின் குரல்: ஐந்தாம் பகுதி *

*மன்னார்குடி பெரியவா*

கொஞ்சம் வேடிக்கை கலந்த மாதிரி இந்த விஷயத்தைப் பற்றி ஒரு பெரியவர் ச்லோகம் பண்ணியிருக்கிறார். ‘பெரியவர்’ என்றேன். அவரைப் ‘பெரியவா(ள்)’ என்றே தான், பெயரைச் சொல்லாமல், மரியாதையாகக் குறிப்பிடுவது வழக்கம். என் மாதிரி ஒரு மடாதிபதியாக
இருப்பவரைப் ‘பெரியவா’ என்பதில் விசேஷமில்லை. ஸ்வயமான யோக்யதை இல்லாவிட்டாலுங்கூட, ஸ்தானத்தினாலேயே எங்களுக்குப் ‘பெரியவர்’ பட்டம் கிடைத்துவிடும். நான் சொல்கிற பெரியவர் மடாதிபதி இல்லை. அதற்கடுத்தபடியாக லோக கௌரவத்தைத் தன்னுடைய ஆச்ரமத்தினாலேயே ஸம்பாதித்துவிடுகிற (மடாதிபதியாக இல்லாத) ஸந்நியாஸிகூட இல்லை.

க்ருஹஸ்தராகவே வாழ்க்கை நடத்தியவர். ஆனால் “குலபதி” என்று புகழக்கூடிய அளவுக்கு ஏராளமான சிஷ்யர்களுக்கு குருகுலம் நடத்திப் பல
மஹாவித்வான்களை உருவாக்கிய மஹா மஹோபாத்யாயராக இருந்தவர். ஸந்நியாஸிகளுங்கூட வந்து பாடம் கேட்டுக்கொண்டு போகும்படியான அப்பேர்ப்பட்ட பாண்டித்யத்தோடு கூடியிருந்தவர். மஹா பண்டிதர் என்பது மட்டும் அவர் பெருமையல்ல. உசந்த குணவானாகவும் இருந்தார். சிவபக்தியில் சிறந்தவர். பரம ஆசார அநுஷ்டானத்தோடுகூட ரொம்பவும் சீலராக வாழ்ந்த பெருமையும் அவருக்கு உண்டு.

ஞானம், சீலம் இரண்டிலும் பெரியவராக இருந்த அவரைத்தான் ‘பெரியவாள்’ என்றே லோகம் சொல்லிற்று. அடையாளம் தெரிவதற்காக, அவர் வாழ்ந்துவந்த ஊரின் பெயரைச் சேர்த்து “மன்னார்குடிப் பெரியவாள்” என்று சொல்வார்கள். உயர்ந்த அறிவு, சிறந்த ஒழுக்கம் இரண்டும் கூடிய அவர் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஸுமார் தொண்ணூறு வயசு ஜீவ்யவந்தராக இருந்து ‘ஞான-சீல-வயோ வ்ருத்தர்’ என்கிற புகழ்ச் சொல்லுக்கு முற்றிலும் உரியவராக இருந்தார். மஹானாகிய அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்த அவருடைய சர்மன் * த்யாகராஜர் என்பது. அவர் யாகங்கள் செய்ததால் ‘த்யாகராஜ மகி’ என்று தம்முடைய நூல்களில் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். ‘மகம்’ என்றால் யாகம். சின்ன வயசிஸில் அவரை வீட்டிலே பெரியவர்கள் கூப்பிட்ட பேர் ராஜு. அதனால் ராஜு சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு.

ஆனால் பேச்சு வழக்கில் ‘மன்னார்குடிப் பெரியவா’ தான். ஊர் உலகமெல்லாம் பெரியவா என்று அழைத்தாலும் ரொம்பவும் அடக்கத்தோடு எளிமையாக இருந்தவரவர். அவருடைய குருமார்களில் கோபாலாசாரியார் என்பவர் ஒருவர். பிற்காலத்திலே இந்த கோபாலாசாரியாரின் புத்திரர் மன்னார்குடிப் பெரியவாளிடம் படித்த மாணவர்களில் ஒருவரானார். இவர் பெரியவாளைவிட வயஸில் சிறியவர் அதோடு சிஷ்யர். அப்படியிருந்தும், குரு புத்ரனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்ற வழக்கை அநுஸரித்து இவர் வகுப்புக்கு வரும்போது இவருக்கு குருவான மன்னார்குடிப் பெரியவாளே எழுந்திருந்து நிற்பாராம்! பக்தி ச்ரத்தை, ஆசாரம், ஸத்குணங்கள், அபாரமான வித்வத் இத்தனையும் பெற்று,

ஸந்நியாஸிகளுக்கும் பாடம் சொன்னவரானாலும் அவர் கடைசி மட்டும் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளவில்லை. “நமக்கு ஏது அவ்வளவு யோக்யதை?” என்றே சொல்வாராம். அத்தனை அடக்க ஸம்பத்து! அவருக்கு மஹாமஹோபாத்யாய பட்டம் சூட்டியதிலேயே இப்படி (அவரது அடக்க குணத்தைக் காட்டுவதாக) ஒரு விஷயம் உண்டு. (1887-ல்) விக்டோரியா பட்டமேறிய கோல்டன் ஜூபிலி கொண்டாடியபோது, இந்தியாவின் பழைய வழக்கத்தை அநுஸரித்து இனிமேல் வெள்ளைக்கார ராஜாங்கமும் பண்டிதோத்தமர்களுக்கு ‘மஹா மஹோ பாத்யாய’பட்டம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள். அதன் பிரகாரம் முதல் வருஷமே வடக்கத்தி வித்வான் ஒருவருக்கும், தெற்கத்தி வித்வான் ஒருவருக்கும் டைட்டில் தருவது என்று தேர்ந்தெடுத்தபோது அவர்களில் ஒருவராக இருந்த தெற்கத்திக்காரர் நம்முடைய மன்னார்குடிப் பெரியவாள்தான்.

ஆனாலும் அவருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டபோது, ‘பூர்வ காலத்தில் மஹா பெரிய வித்வான்களுக்கே கொடுத்து வந்த இந்தப் பட்டம் எனக்கா?அவ்வளவு யோக்யதை இல்லவே இல்லை’ என்று சொல்லிச் சும்மா இருந்துவிட்டாராம். பட்டம் வாங்கிக்கொள்ள அவர் டில்லி தர்பாருக்குப் போகவேயில்லை! விஷயத்தை மறந்துவிட்டுத் தம்பாட்டுக்குப் பாடம் சொல்வது, சிவ பூஜை பண்ணுவது என்று இருந்துகொண்டிருந்தார். ராஜாங்கத்தில் இவருக்காகக் காத்துக் காத்துக் பார்த்தார்கள்.
டில்லிக்குப் போகாவிட்டாலும் கிட்டத்தில் இருக்கிற தஞ்சாவூருக்காவது போய் கலெக்டரிடமிருந்து டைட்டிலை ராஜமரியாதையோடு பெறுவாரா என்று காத்துப் பார்த்தார்கள். விநயப் ஸம்பன்னரான இவருக்கா, அந்த எண்ணமேயில்லை! அப்புறம் கலெக்டர் அந்தப் பெரிய பட்டத்துக்கான ஸன்னதுகளை அவருடைய வீட்டுக்கே அனுப்பி வைத்தபோதுதான் மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டார்.

வித்யை இருந்தால் தலைக்கனமும் இருக்கத்தான் வேண்டும் என்றில்லாமல் நேர் வித்யாஸமாக இருந்தார். வித்யாரம்பத்திலேயே விநாயகரை வந்தனம் செய்வதாலும், எந்த சாஸ்த்ரமாயிருந்தாலும் அதற்கான புஸ்தகத் தொடக்கத்திலேயே பிள்ளையார் ஸ்துதிக்கப்படுவதாலும் உண்மையான வித்வானொருவன் எப்படியிருக்கவேண்டும் என்று காட்டிய அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்வதெல்லாமும் விக்நேச்வர ப்ரீதிதான். நாம்
எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டதாக ஆகாது.

* ஒரு அந்தணருக்கு சாஸ்திரோக்தமாக நாமகரணமிடப்படும் பெயர்.TO BE CONTINUED

மன்னார்குடிப் பெரியவாள் Click here for Deivathin Kural link

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 2*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 2*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *

*(ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பால்யத்தில் பாடம் சொல்லிக்கொடுத்தவர். மன்னார்குடி
பெரியவாளின் பிரதம சிஷ்யர், மன்னார்குடி பெரியவாளுக்கு பிறகு கும்பகோணம் அத்வைத
சபாவில் முக்கிய அங்கம் வகித்தவர்)*

*பிறப்பு, உபநயனம், ஆரம்பக் கல்வி*
தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில்
துலஜேந்திரபுரம் என்ற பைங்காநாடு கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் 1871-ம் ஆண்டு ஏப்ரல்
திங்கள் 28-ம் நாள், திரு கணபதி சாஸ்திரிகள் பிறந்தார். அவர் பிறப்பால் அந்த சிற்றூர் பெருமை
அடைந்தது. இவருடைய தந்தை திரு சுப்ரமணிய சாஸ்திரிகள், யஜுர் வேத பண்டிதர். பழுத்த சிவ
பக்தர். அன்னையார் திருமதி சீதாலெட்சுமி. இறை திருப்பணிகளில் ஈடுபாடும் சிறந்த குண
நலன்களும் உடையவர். வேத விற்பன்னரான திரு அனந்தராம சாஸ்திரிகள் அவருடைய
பாட்டனார் ஆவார்.
கணபதிக்கு ஆரம்பக் கல்வி தாயின் தந்தையாராகிய திரு சுவாமிநாத சாஸ்திரிகளால்
சொல்லித் தரப்பட்டது. இப்பெரியவர், வேதாரண்யத்தில் தமது பள்ளியில் தலைமை ஆசிரியராக
இருந்தார்.

1879-ம் ஆண்டில், கர்பாஷ்டம வயதில் உபநயனம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு
முறைப்படி வேதாத்யயனம் செய்து பைங்காநாடு வெங்கடேச சாஸ்திரிகள் மூலம் காவிய,
இலக்கிய, அலங்காரம் படித்தார். *ஸ்ரீ வாக் தேவி, கணபதி சாஸ்திரிகளை இளம் வயதிலேயே
ஆட்கொண்டு அருள் செய்து விட்டார். தன் பதினாறாவது வயதிலேயே 'கடாக்ஷ சதகம் ' என்னும்
பக்தி ரசம் ததும்பும் தோத்திரம் எழுதினார். * (அம்பாள் திருக் கருணையே காரணம்) . திரு
சாஸ்திரிகளால் செய்யப்பட்ட நூல்களில் இதுவே முதல் நூலாகும்.

பிறகு மஹாமஹோபாத்யாய ப்ரம்மஸ்ரீ தியாகராஜமகி என்ற ராஜு சாஸ்திரிகளை (ஸ்ரீ
மன்னார்குடி பெரியவா) அடைந்து மேற்கொண்டு கல்வி கற்க தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
திரு ராஜு சாஸ்திரிகளிடம் குருவைப் போற்றிப் பணிந்து தர்க்க, வியாகரண, மீமாம்ஸா, போன்ற
வேதாந்த சாஸ்திரங்கள் எல்லாம் கற்று, கல்வி, கேள்வி அறிவில் உயர்வு பெற்றார்.

ஆசிரியப் பண்பில், ஒழுக்கத்தில் சிறந்தவரான சாஸ்திரிகளும், மாணவரின் கற்கும்
திறனிலும் நுண் அறிவிலும், சிறப்பிலும் பண்பிலும் கவரப்பட்டு பற்று கொண்டவர் ஆனார்.
நிற்க: இங்கு குறிப்பிடப்படும் த்யாகராஜமகி (என்ற) ராஜு சாஸ்திரிகள் (என்ற)
மன்னார்குடி பெரியவாளைப் – பற்றி ஸ்ரீ மஹாபெரியாவாள் தெய்வத்தின் குரலில்
சொல்கிறார்கள். அன்னாரைப் பெயரை சொல்லி கூப்பிடக்கூடாது; மன்னார்குடி பெரியவா
என்றே சொல்லவேண்டும் என்று! அவரை பற்றி ஸ்ரீ பெரியவா என்ன சொல்கிறார்கள்
என்பதையும், நாம் அவசியம் படிக்க வேண்டும்.
அவரைப் பற்றி அடுத்த பதிவில் படிப்போம்;

*TO BE CONTINUED IN PART 3*

September 21, 2018

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 1*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 1*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *
*(ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பால்யத்தில் பாடம் சொல்லிக்கொடுத்தவர். மன்னார்குடி
பெரியவாளின் பிரதம சிஷ்யர், மன்னார்குடி பெரியவாளுக்கு பிறகு கும்பகோணம் அத்வைத
சபாவின் அத்யக்ஷராக இருந்தவர்)*

யஸயாந்தருஜ்வலதி திவ்யபரார்த்ததத்வமஜ ஞானரூபதிமிரம் பரிமார்ஜ்ஜயந்தம்
தம பாஸ்கரம் குருவரம் ஸகலாகமார்த்த போதப்ரதம் கணபதிம் மனஸா ஸ்மாராமி

எவருடைய உள்ளத்தில் பரமார்த்த தத்துவம் ஒளி வீசுகிறதோ, அறியாமை இருளைப்
போக்குபவராகவும் ஒளிவிளக்கத் திரு உருவமாகவும் குரு சிரேஷ்டர் ஆகவும் வேதங்களின் அறிவுச்
செல்வதைக் கொடுப்பவருமாக இருக்கின்ற அந்த கணபதியை உள்ளத்தில் எண்ணுகிறேன்.
இந்தப் பிறப்பில் ஈஸ்வரனுடைய கருணையினால்தான் மனிதப் பிறவி பெறுகிறான். இவ்விதம்
இருந்தும் எல்லோரும் அறிவு உள்ளவர்களாக ஆவது இல்லை. பிறவிப்பயன் அடைவதற்காக
முயற்சியும் எல்லோராலும் செய்யப்படுவதும் இல்லை.
பகவத் கீதை இப்படிச் சொல்லுகிறது:
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்ச்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தானாம் கஸ்ச்சின்மாம் வேத்தி தத்வத :

ஆயிரம் மனிதர்களில் யாரோ ஒருவன்தான் அறிவைத் தேட முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி
செய்பவர்களில் யாரோ ஒருவன் தான் என்னை உண்மையில் தெரிந்துகொள்கிறான்.
அறிவாளிகளாக உள்ள மனிதரில் எல்லோரும் எல்லாம் அறிந்த புலவனாக ஆவது இல்லை.
எல்லாம் அறிந்த புலவர்களுக்குள்ளேயும் மஹாபுருஷர்கள் குறைவுதான். மஹாபுருஷர்களின்
சேவையானது பாக்கியம் உள்ளவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

துர்லபம் த்ரயமேவைதத் தைவானுகிரஹ ஹேதுகம்
மனுஷயத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷ ஸம்ஸ்ரய:

என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களும் கூறியிருக்கிறார்.

மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரி என்ற மஹான், பொதுமக்களைத் தனது
அறிவொளியால் அருள் பாலிப்பதற்கு (அதாவது எல்லோரையும் அறிவாளிகளாகச் செய்வதற்கு )
இந்த பாரத நாட்டில் பிறந்து மஹாபுருஷர் ஆனார்

*TO BE CONTINUED*