*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 1*

*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 1*

*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *
*(ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பால்யத்தில் பாடம் சொல்லிக்கொடுத்தவர். மன்னார்குடி
பெரியவாளின் பிரதம சிஷ்யர், மன்னார்குடி பெரியவாளுக்கு பிறகு கும்பகோணம் அத்வைத
சபாவின் அத்யக்ஷராக இருந்தவர்)*

யஸயாந்தருஜ்வலதி திவ்யபரார்த்ததத்வமஜ ஞானரூபதிமிரம் பரிமார்ஜ்ஜயந்தம்
தம பாஸ்கரம் குருவரம் ஸகலாகமார்த்த போதப்ரதம் கணபதிம் மனஸா ஸ்மாராமி

எவருடைய உள்ளத்தில் பரமார்த்த தத்துவம் ஒளி வீசுகிறதோ, அறியாமை இருளைப்
போக்குபவராகவும் ஒளிவிளக்கத் திரு உருவமாகவும் குரு சிரேஷ்டர் ஆகவும் வேதங்களின் அறிவுச்
செல்வதைக் கொடுப்பவருமாக இருக்கின்ற அந்த கணபதியை உள்ளத்தில் எண்ணுகிறேன்.
இந்தப் பிறப்பில் ஈஸ்வரனுடைய கருணையினால்தான் மனிதப் பிறவி பெறுகிறான். இவ்விதம்
இருந்தும் எல்லோரும் அறிவு உள்ளவர்களாக ஆவது இல்லை. பிறவிப்பயன் அடைவதற்காக
முயற்சியும் எல்லோராலும் செய்யப்படுவதும் இல்லை.
பகவத் கீதை இப்படிச் சொல்லுகிறது:
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்ச்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தானாம் கஸ்ச்சின்மாம் வேத்தி தத்வத :

ஆயிரம் மனிதர்களில் யாரோ ஒருவன்தான் அறிவைத் தேட முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி
செய்பவர்களில் யாரோ ஒருவன் தான் என்னை உண்மையில் தெரிந்துகொள்கிறான்.
அறிவாளிகளாக உள்ள மனிதரில் எல்லோரும் எல்லாம் அறிந்த புலவனாக ஆவது இல்லை.
எல்லாம் அறிந்த புலவர்களுக்குள்ளேயும் மஹாபுருஷர்கள் குறைவுதான். மஹாபுருஷர்களின்
சேவையானது பாக்கியம் உள்ளவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

துர்லபம் த்ரயமேவைதத் தைவானுகிரஹ ஹேதுகம்
மனுஷயத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷ ஸம்ஸ்ரய:

என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களும் கூறியிருக்கிறார்.

மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரி என்ற மஹான், பொதுமக்களைத் தனது
அறிவொளியால் அருள் பாலிப்பதற்கு (அதாவது எல்லோரையும் அறிவாளிகளாகச் செய்வதற்கு )
இந்த பாரத நாட்டில் பிறந்து மஹாபுருஷர் ஆனார்

*TO BE CONTINUED*

Leave a comment